BREAKING NEWS
latest

Maldives News - Arab Tamil Daily - The 24×7 Gulf News

Latest Maldives News News, Articles, Maldives News Images, Videos, Full-Time GCC Arabic News in Tamil, Film, Entertainment, Politics, and Sports Updates from Arab Tamil Daily.

Tuesday, February 13, 2024

மாலத்தீவில் தமிழக இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த துயர செய்தி தற்போது வெளியாகியுள்ளது

தமிழக இளைஞர் தவறி விழுந்ததில் மாலத்தீவில் உயிரிழந்தார்

Image : உயிரிழந்த ராஜேஷ்(வயது-20)

மாலத்தீவில் தமிழக இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த துயர செய்தி தற்போது வெளியாகியுள்ளது

மாலத்தீவு தலைநகர் மாலியில் இந்தியா,தமிழகம், மயிலாடுதுறையை அடுத்த சீர்காழியைச் சேர்ந்த ராஜேஷ்(வயது-20). அவர் இன்று(13/02/24) காலையில் அந்நாட்டின் சாந்தினி மாகுவில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் வேலை செய்யும் போது சீலின் உடைந்து 10-வது மாடியில் இருந்து தவறி படி கட்டுகளுக்கு இடையேயுள்ள இடைவெளி வழியாக தரைத்தளத்திலேயே விழுந்துள்ளார். உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் கவலைக்கிடமாக இருந்த அவரை மீட்டு அங்குள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையின்(IGMH) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றன. இந்த செய்தியை அங்குள்ள தினசரி செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Worker | Maldives News | Indian Worker

Add your comments to Maldives News

Thursday, May 6, 2021

மாலத்தீவு முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான முகமது நஷீத் வீட்டின் முன்பு குண்டுவெடிப்பு

மாலத்தீவு முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான முகமது நஷீத் வீட்டின் முன்பு குண்டுவெடிப்பு;அவருடன் சேர்ந்து மொத்தம் 3 பேர் காயமடைந்ததனர்

மாலத்தீவு முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான முகமது நஷீத் வீட்டின் முன்பு குண்டுவெடிப்பு

மாலத்தீவு நாட்டின் முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான முகமது நஷீத் வீட்டின் முன்பு குண்டுவெடிப்பு,அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதி பெற்றுள்ளதாக தகவல். தலைநகரின் கலோலு மாவட்டத்தில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. அதேபோல் அவருடைய பாதுகாவலர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் உட்பட மேலும் 2 பேர் காயமடைந்தனர் என்ற தகவலும் முதல்கட்டமாக வெளியாகியுள்ளது. இதுபோல் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் டல சேதமடைந்தன என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. அவருக்கு ADK மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகின்றன.

Search_tags

Add your comments to Maldives News

Friday, February 12, 2021

மாலத்தீவு தலைநகர் பகுதிக்குள் இன்று முதல்(12/2/2021) வாகனத் தடை விதிக்கப்பட்டுள்ளது

மாலத்தீவு தலைநகர் பகுதிக்குள் இன்று முதல்(12/2/2021) வாகனத் தடை விதிக்கப்பட்டுள்ளது;அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்திதளம் இது தொடர்பான செய்தி வெளியிட்டுள்ளது

Image credit: Official Soure

மாலத்தீவு தலைநகர் பகுதிக்குள் இன்று முதல்(12/2/2021) வாகனத் தடை விதிக்கப்பட்டுள்ளது

அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்திதளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் COVID-19 பரவுவதைத் தடுப்பு நடவடிக்கைக்காக தினமும் மாலை 6:00 PM முதல் காலை 6:00 AM வரை வாகனங்களுக்கு தடை வித்துள்ளது. எல்லோரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என்ற அறிவிப்பு தேதி குறிப்பிடாமல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Effective TODAY(12/2/2021) a vehicle ban will be imposed within Greater Male area.The vehicle ban is set in place from 6PM to 6AM everyday to help flatten the curve and to stop the spread of COVID-19.We urge everyone to strictly adhere to the safety measures in place.

Add your comments to Maldives News

Friday, December 4, 2020

மாலத்தீவு இந்தியருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது:

மாலத்தீவு இந்தியருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது:



Dec-4,2020

மாலத்தீவிலிருந்து புறப்படும் பயணிகளுக்கு Airlines Service Charge விமான சேவை கட்டணம் (ஏஎஸ்சி) விதிக்கப்படுகிறது.

வெளிநாட்டு பயணிகளுக்கு 25 அமெரிக்க டாலர்கள் மற்றும் மாலத்தீவு நாட்டு பயணிகளுக்கு 12 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படுகிறது என்று Maldives Inland Revenue Authority (MIRA) அறிவித்துள்ளது.

Airport Service Charge (ASC) is levied on passengers departing from the Maldives from an airport in the Maldives, at a rate of USD 25 per foreign passenger and USD 12 per Maldivian passenger.


Add your comments to Maldives News